தேவனால் அருளப்பட்ட பாதை GOD'S PROVIDED WAY 61-0516M செவ்வாய்க்கிழமை காலை, மே 16, 1961 சீயோன் சுவிசேஷ கூடாரம், கிராண்டு ப்ரைரி, அல்பெர்டா, கனடா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 61-0516M - தேவனால் அருளப்பட்ட பாதை நன்றி, சகோதரர் சோத்மன் அவர்களே. காலை வணக்கம் நண்பர்களே. கனடாவிலுள்ள இந்தச் சமூகத்தாரோடு மீண்டும் ஒருமுறை இங்கு இருப்பதை நான் நிச்சயமாக ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நான் இதற்கு முன்பு இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆனால் நான் மீண்டும் வர வேண்டும் என்று எப்போதும் ஏங்கிக் கொண்டிருந்தேன். 2 எனக்கு இந்தப் புல்வெளிப் பிராந்திய மக்களையும் மலைப்பகுதி மக்களையும் மிகவும் பிடிக்கும், அவர்கள் வெறும் சாதாரண வீட்டு மனிதர்கள், நாங்கள் அமெரிக்காவில் அழைப்பது போல, வெறுமனே "நாட்டிலேயே நெய்யப் பட்டவர்கள் (homespun)," வெறும் உண்மையான மனிதர்கள்; அவர்களிடம் எந்தவித ஆடம்பரமும் இல்லை, அவர்கள் தேவனை விசுவாசிக்கிற, தேவனை நம்புகிற மற்றும் இருதயத்தில் தாழ்மையுள்ள மனிதர்கள். அப்படித்தான் தேவன், அதுபோன்ற மக்களோடு கிரியை செய்கிறார். 3 இதற்குப் பெரிய சபைக் கூட்டங்கள் தேவையில்லை. இயேசு பெரிய சபைக் கூட்டங்களோடு கூடிவருவதாக ஒருபோதும் வாக்குப்பண்ணவில்லை. அவர், "எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்தினாலே கூடிவருகிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருப்பேன்," என்றுதான் வாக்குப் பண்ணினார். வேதம் சொல்லுகிறது, "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணினால்... அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன்." 4 மேலும் இது... இது ஒரு மகத்தான நேரம். உண்மையில் நான் ஒரு சிறிய ஓய்விற்காகவே வந்தேன். நான் கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து பயணத்திலேயே இருந்தேன். இந்தக் கூட்டங்கள் என் சரீரத்திற்கு மிகுந்த சோர்வை உண்டாக் குகிறது. எனக்குச் சிறிது ஓய்வு தேவைப் பட்டது, எனவே நான் நினைத்தேன், "சரி, நான் புளோரிடாவிலுள்ள என் நண்பர் சகோதரர் வெல்ச் இவான்ஸ் அவர்களுடன் சென்று, சிறிது நேரம் மீன் பிடிக்கலாம்," பின்னர் எனக்குத் தோன்றியது. "உங்களுக்குத் தெரியும், நான் டாவ்சன் கிரீக் (Dawson Creek) பகுதிக்குச் சென்று, சிறிது நேரம் மீன் பிடித்து, வேட்டையாடி, என் நண்பர் கிரிஸ் பெர்க் மற்றும் அங்கிருக்கும் சில சகோத ரர்களைப் பார்த்தால் நன்றாக இருக்கும்." பின்னர் நான் நினைத்தேன், "அங்குள்ள மக்களுக்காகச் சில கூட்டங்களை நடத்த வில்லையென்றால், நான் தேவனுக்கு கனம் செலுத்துகிறவனாக இருக்க மாட்டேன்." 5 எனவே எல்லாம் ஒரு காரியத்திற்கு ஏதுவாக அமைந்தது, நான் என்னுடைய அழைப்பிதழ்களைப் பார்த்தேன், டாவ்சனில் சகோதரர் ஹண்டர் இருந்த இடத்தில் வேறொருவர் பொறுப்பேற்றிருப்பதைக் கண்டேன். எனவே நான் அந்தச் சகோதரரை அழைத்தேன், அவருடைய பெயர் எனக்குச் சரியாகத் தெரியவில்லை, அவர் இன்று காலை இங்கு இருக்கலாம், அவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அவர் பதில் எழுதினார், "நிச்சயமாக உங்களுக்காக இங்கே ஓரிரு கூட்டங்களை அல்லது ஓரிரு இரவுகளை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்." மேலும் அவர், "நீங்கள் வெளியே சென்று மீன் பிடிப்பதற்காக ஒரு வழிகாட்டியையும் நான் தயார் செய்கிறேன்," என்று சொன்னார். 6 அதுவே நான் வந்து உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பைத் தந்தது. அதன்பின் அவர்கள் கீழே வந்தார்கள், நான் சொன்னேன், "சரி, கிராண்ட் பிரெய்ரியை (Grande Prairie) மறந்துவிடாதீர்கள், ஏனென்றால் நான் அங்கே தங்குவேன், நான் அங்கு இருக்கும் ஓரிரு நாட்கள் அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடும்." அப்படித் தான் இன்று காலை நாம் இங்கே இருக்கிறோம். 7 ஆனால் நாங்கள் உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கவே வந்திருக்கிறோம். நீங்களும் எங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் எந்தவொரு ஸ்தாபனத் தையும் பிரதிபலிக்க இங்கு வரவில்லை, நாங்கள் கிறிஸ்துவை மட்டுமே பிரதிபலிக்க முயற்சிக்கிறோம், அவரே அந்த ஒருவர். நான் நிச்சயமுடையவனாயிருக் கிறேன் அவர்-அவர் ... உங்கள் பாவங்களை மன்னிப்பதிலும், ஆவியினால் நிரப்புவதிலும் அவரை உங்கள் இரட்சகராக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அல்லது அறிந்திருக் கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 8 உலகெங்கிலும் நான் பிணியாளி களுக்காக ஜெபிக்கச் செல்லும் பல இடங்களில், சிலர், "சகோதரர் பிரான்ஹாம், தெய்வீக சுகமளிப்பவர்," என்று சொல்லு கிறார்கள். அது தவறு. நான் சுகமளிப்பவன் அல்ல, வேறெந்த மனிதனும் சுகமளிப்பவன் என்று நான் நம்பவில்லை, தேவனே சுகமளிப்பவர் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் ஏற்கனவே உங்களுக்காகச் செய்யப் பட வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டார். இப்போது, அடுத்தது அவர் செய்து முடித்த வேலையை விசுவாசிக்க வேண்டியது உங்களுடைய விசுவாசமே. 9 நான் ஒருபோதும் ஒரு மருத்துவரின் இடத்தைப் பிடிக்க வரவில்லை. நான் ஒரு மருத்துவர் அல்ல. நான் தேவனுடைய பிள்ளைகளுக்காகவும், மருத்துவரின் நோயாளி களுக்காகவும், என் நண்பர்களுக்காகவும் ஜெபிக்கவே வந்திருக்கிறேன். அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இங்கே இந்தப் புல்வெளியின் மத்தியில் அமைந் திருக்கும் இந்தப் புதிய, அழகான, சிறிய தேவாலயத்தில் கூடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது, நல்ல மனிதர்கள். 10 நேற்று வரும் வழியில், நான் கவனித்தேன், அது எனக்கு நினைவுபடுதியது, அல்லது, நான் பிறந்த கென்டக்கி மாநிலத்தில் என் தகப்பன் எனக்குச் சொல்லுவார், அவர்கள் மரங்களை வெட்டி அவற்றை உருட்டுவார்கள், மரக்கட்டைகளை உருட்டுதல் (log rollings) மற்றும் அவற்றை எரிப்பார்கள், உங்களுக்குத் தெரியும். ஆண்கள் அனைவரும் சோளத்தை வறுப்பார்கள், பெண்கள் மிட்டாய் செய் வார்கள், மேலும் மரக்கட்டைகளை உருட்டு வார்கள், உங்களுக்குத் தெரியும், அங்கே சோளம் சர்க்கரை பாகு (sorghum molasses) இருக்கும், அநேகமாக இதெல்லாம் இங்குள்ள உங்களுக்கு அந்நியமானதாக இருக்கலாம். 11 ஜார்ஜியாவிலிருந்து வந்த ஒருவரைப் பார்த்தேன், அவர் சற்றே புன்னகைத்தார், அவருக்குச் சோளம் சர்க்கரை பாகு என்றால் என்னவென்று தெரியும். சோளம் சர்க்கரை பாகு என்றால் என்னவென்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும் என்று ஆச்சரியப்படுகிறேன்? சகோதரியே, நீங்கள் கென்டிக்கியில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? சரி. எனக்கு அவை மிகவும் பிடிக்கும். நாங்கள் சோளப் பாகைத் தெளிவாக்கி மிகுந்த சந்தோஷமாய் இருப்போம். 12 நான் வந்த அந்தப் பழைய தெற்கு மிஷனரி பாப்டிஸ்ட் சபையில், நாங்கள் ஒன்றுகூடித் தரையில் அமர்ந்து உணவ ருந்துவோம், பாதம் கழுவுதல் (Footwash) நடைபெறும். பாதம் கழுவுதல் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? பாதம் கழுவுதல்... ஓ, அது பெந்தெகொஸ்தே சபைக்குள்ளும் நேராக வந்துவிட்டது. நாங்கள் அங்கே மகத்தான நேரங்களை, பெரிய கொண்டாட்டங்களை வைத்தி ருப்போம். 13 இப்போது, நாம் இங்கே கூடியிருப்பது, ஒரு வித்தியாசமான கொண் டாட்டத்திற்காக, ஒரு ஆவிக்குரிய கொண் டாட்டத்திற்காக, தேவனுடைய காரிய ங்களையும், அவருடைய நன்மையையும், அவருடைய இரக்கத்தையும் நாம் அனை வரும் அறிந்திருக்கிறோம். 14 இதற்கு முன்பு நான் இங்கே இருந்தது நினைவிருக்கிறது, இங்கே சில நல்ல மனிதர்கள் இருந்தார்கள். இந்த நார்வேஜியன் அல்லது ஸ்வீடிஷ் பெயரை நான் தவறாக உச்சரிக்கலாம், அது எதுவாக இருந்தாலும், அவர்கள் பெயர் போன்ரூட் (Bonderud), அல்லது அப்படி ஏதோ ஒன்று என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு நாள் காலை காட்டு வாத்துகளைச் சுடுவதற்காக அவர்கள் என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் களின் அன்பு மிகவும் சிறப்பாக இருந்தது, அது என்னைக் கொல்லும் அளவுக்கு இருந்தது (அன்பின் மிகுதியால்). 15 அன்று இரவு நான் கூட்டத்தை முடித்த பிறகு, அவர்கள் ஒரு பெரிய, அமெரிக்காவில் நாங்கள் அதை இரவு உணவு (supper) என்று அழைப்போம், நீங்கள் இங்கே அதை 'டின்னர்' (dinner) என்று அழைப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நான் எப்போதும் குழம்பிப்போகிறேன். அது டின்னராக இருந்தால், பிறகு எப்போது நான் இரவு உணவு (supper) சாப்பிடப் போகிறேன்? பாருங்கள், மாலை வேளை உணவுதான் டின்னர் என்றால், நான் மிகவும் குழம்பிப்போய் ஒரு வேளை உணவைத் தவறவிட்டுவிடுகிறேன். 16 தெற்கே, நாங்கள் அதை எங்கள் காலை உணவு (breakfast), மதிய உணவு (dinner), மற்றும் இரவு உணவு (supper) என்று அழைக்கிறோம். அப்படியானால் கடைசியாகச் சாப்பிடுவதுதான் என் டின்னர் என்றால், என் மதிய உணவிற்கு என்னவாயிற்று? பாருங்கள், அப்படியானால், இதுதான் என் டின்னர் என்றால், என் சப்பர் (supper) எங்கே வருகிறது? மறுநாள் காலையில், அது பிரேக்ஃபாஸ்ட் (breakfast) என்று சொல்லு கிறீர்கள். அதனால் எனக்கு அது சரியாகப் புரிவதில்லை. 17 எப்படியிருந்தாலும், எனக்குச் நன்றாகத் தெரிந்த வழியிலேயே சொல்லு கிறேன், நான் இரண்டு சப்பர்களைச் (இரவு உணவுகளை) சாப்பிட்டேன். அங்கே ஒன்றைச் சாப்பிட்டேன், பின்னர் நான் படுக்கைக்குச் செல்லும்போது, ஏறக்குறைய ஒரு மணி அல்லது பன்னிரண்டு மணி இருக்கும், அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே அவர்கள் என்னை என் காலை உணவோடு எழுப்பிவிட்டார்கள். நான் வயல்வெளியில், ஏதோவொரு ஓட்ஸ் விளைந்த நிலத்தில், வாத்துக ளிடமிருந்து மறைந்துகொள்ள ஒரு குழி தோண்டிக் கொண்டு உள்ளே இருந்தேன். பின்னர், நாங்கள் சுமார் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பினோம். நான்... இங்கே நான் தவறவிட்ட அந்த இரவு உணவுகள் (suppers) எல்லாம் அங்கே ஈடுசெய்யப் பட்டன. ஏனென்றால் நான் திரும்பி வந்தபோது, எனக்கு மற்றொரு காலை உணவு கிடைத்தது, எனவே அந்த நாளில் எனக்கு இரண்டு காலை உணவுகள் கிடைத்தன, அதனால் நான்... அந்த மக்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், நான் இங்கு இருக்கும்போது அவர்களைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன். 18 டாவ்சன் கிரீக்கில் சில மக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஒரு போதகர். எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தோன்றுகிறது... நான் அந்தப் பெயரைச் சரியாக உச்சரிக்கிறேனா? போன் ரூட், போன்ரூட், போன்ரூட்? அவர்களில் ஒருவர் போதகர். ஐனார் என்று நினைக்கிறேன், அல்லது ஐனட்? ஐனார்? ஐவர், ஐவர் (Iver). பெரிய மனிதர், நல்ல மனிதர், அவர்... என்ன? [ஒரு சகோதரர், "அவர் அங்கே இருக்கிறார், இரண்டாவது வரிசையில்," என்று சொல்லுகிறார்] ஐவர் போன்ரூட், நன்று, நன்று, நன்று, நான் இங்கே நின்று அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர் இங்கே நின்று, நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் இப்போது அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்துவது நல்லது. சரி. 19 சகோதரர் போன்ரூட், உங்கள் தகப்பனும் தாயும் மரித்துவிட்டார்களா? அவர்கள் இருவரும். அந்தச் சிறிய நார்வேஜியர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் அவருடைய வீட்டில், அங்கே போதகர் இல்லத்தில் இருந்தேன். கிரவுண்ட் பிர்ச் (Ground Birch) என்ற சிறிய இடத்தில் நான் சில நாட்கள் தங்கியி ருந்தேன். அது சரிதானே? அந்தச் சிறிய அம்மா மற்றும் அப்பா போன்ரூட், சிறிய நார்வேஜியர்கள், நான்... அது சரிதானே? அல்லது ஸ்வீடிஷா? ஸ்காண்டிநேவியர்களில் ஒருவர்..., நார்வேஜியன். அங்கே வீட்டில், அப்பா கடைக்குச் சென்று அவருக்கு, சில மளிகைச் சாமான்களை வாங்கச் செல்வார், அம்மா ஜன்னலோரத்தில் அமர்ந்து, அவர் வருவ தற்காகத் திரையை விலக்கிப் பார்த்துக் கொண்டே இருப்பார். 20 சிறிது நேரத்தில், அவர் அங்கே வேகமாய் நடந்து வருவார். அவர் கையில் ஒரு சிறிய வாளியும், கக்கத்திற்கு அடியில் சில சிறிய பொட்டலங்களும் வைத்திருப்பார். அவர் வருவதை அம்மா பார்த்ததும், அவரைச் சந்திக்க ஓடுவார். அவர் கையிலிருந்து சில பொட் டலங்களை வாங்கிக் கொண்டு, அவரைத் தட்டிக்கொடுப்பார். இங்கே அவர்கள் சென்றார்கள், இரண்டு சிறிய தம்பதிகள் வருகிறார்கள். ஓ, நான் என் கைகளை உயர்த்தி அழுதேன், நான் நினைத்தேன், "அது அழகாக இருக்கிறது அல்லவா?" 21 மறுநாள் எங்களுக்கு ஒரு பெரிய உணவு விருந்து (gastronomical jubilee) இருந்தது, ஏனென்றால் அவர்கள் பிள்ளைகள் எல்லாரையும் வரவழைத்தார்கள், மதிய உணவிற்கு எல்லாம் வைத்திருந்தார்கள். அது பன்னிரண்டு மணிக்கு இருந்தது. அங்கே ஒரு பெரிய விருந்து வைக்கப்பட்டிருந்தது. 22 நான் அந்தச் சிறிய தம்பதியிடம் பேச மிகவும் விரும்பினேன், ஆனால் அவர்களுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பேசத் தெரியாது என்று நினைக்கிறேன், எனக்கு ஒரு வார்த்தை கூட நார்வேஜியன் மொழி பேசத் தெரியாது, அதனால் நாங்கள் ஒருவருக் கொருவர் சைகை செய்துகொண்டோம். யாரோ ஒருவர் வந்து எனக்கு மொழி பெயர்த்தார். நான் சொன்னேன், "உங்களுக்குத் தெரியும், ஒரு நாள் நான் நதியைக் கடந்து, மகிமையின் வீதிகளில் வரும்போது, ஒரு அழகான நார்வேஜிய மனிதரையும், ஒரு அழகான, சிறிய நார்வேஜிய பெண்ணையும், இளமையாக, மீண்டும் முதுமை அடையாத வர்களாகக் காண்பேன் என்று எதிர் பார்க்கிறேன். நான் கேட்பேன், 'எனக்கு உங்களைத் தெரியாதா?' அவர்கள் சொல் வார்கள், 'ஓ, ஆம், சகோதரர் பிரான்ஹாம், உங்களுக்கு எங்களைத் தெரியும், நாங்கள் பூமியில் இருந்தபோது ஒரு நாள் மேஜையில் உங்களுக்குக் காட்டு வாத்தை உணவாகக் கொடுத்தோம்.'" 23 அவர்கள் இருவரும் அந்தப் பரலோக வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் என்று நான் கேள்விப்படுகிறேன். தேவன் அவர்கள் அருமையான ஆத்துமாக்களுக்கு இளைப் பாறுதல் அளிப்பாராக என்பது என் ஜெபம். 24 இன்று காலை நாம் வழி விட்டிருக்கிறோம், போதகர் நமக்கு அறிமுகத்திற்காக, கூட்டத்திற்குச் சற்றே அறிமுகம் போல, இந்தச் சிறிய நேரத்தைக் கொடுக்க மிகவும் நல்லவராக இருந்தார். வழக்கமாக நான் பிரசங்கிக்கும்போது, ஆறு மணி நேரத்திற்கு மேல் பிரசங்கிக்க மாட்டேன், அல்லது அது போன்ற ஏதாவது ஒன்று, நான் வழக்கமாக சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரப் பிரசங்கத்திற்குப் பிறகு, ஏறக்குறைய முடிப்பேன். அதனால் அவர்கள்... ஆனால் இன்று காலை அறிமுகத்திற்காக சுமார் முப்பது நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்வோம், ஏனென்றால் நீங்கள் வீட்டிற்குச் சென்று, சாப்பிட்டுவிட்டு, மீண்டும் இரண்டு முப்பது மணிக்கு வர வேண்டும். 25 இந்தக் கூட்டங்களின்போது எத்தனை பேர் ஜெபிக்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் கைகளைப் பார்ப்போம், கட்டிடம் முழுவதும். சரி. இப்போது, உங்களுக்கு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால், நினைவில் கொள்ளுங்கள். இது மிக விரைவாக நடக்கும். நாம் சீக்கிரம் உள்ளே வந்து, சீக்கிரம் செல்ல வேண்டும். நாங்கள் டாவ்சனுக்குச் செல்கிறோம். எனவே, இன்று மதியமே அவர்களை இங்கே அழைத்து வாருங்கள். இரண்டு முப்பதுக்கா கூட்டம் தொடங்குகிறது? 26 ஓ, அவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு முன்பாக, அதுபோல அழைத்து வாருங்கள், என் மகன், அங்கே பின்னால் இருப்பான், ஜெப அட்டைகள் (prayer cards) வேண்டுபவர் எவருக்கும் அவன் கொடுப்பான். பின்னர் நாம், ஒரு அரங்கம் (arena) போல இல்லாமல், அனைவருடைய எண்கள் அழைக்கப்படும்போது அவர்கள் முன்னால் வருவார்கள், அந்த முறையில் நாம் அவர்களுக்காக ஜெபிப்போம். இப்போது, ஜெபம் தேவைப்படும் உங்கள் அயலார் யாராவது இருந்தால், ஜெப அட்டை பெறுவதற்கு இன்று மதியம் சீக்கிரமாகவே அவர்களை அழைத்து வாருங்கள். 27 இப்போது, நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பாக, நாம் தலைகளைத் தாழ்த்தி, ஜெபத்தின் மூலமாக வார்த்தையின் கர்த்தரை அணுகுவோம். 28 கிருபையும் பரிசுத்தமுமுள்ள தேவனே, தேவனுடைய விலையேறப்பெற்ற மகிமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், ஜெபத்தின் வழியாக நாங்கள் உம்முடைய சமுகத்தில் வருகிறோம். ஏனென்றால், அவருடைய நாமத்தில் நாங்கள் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அது அருளப்படும் என்று வேதத்தில் எங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. 29 இப்போது, நாங்கள் இந்த அருமை யான சபையின் பெயரிலோ, அல்லது போதகர்களின் பெயரிலோ, அல்லது தேசத்தின் பெயரிலோ வந்தால், அது எங்களுக்கு எந்தப் பலனையும் தராது, எங்கள் ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் என்ற விசுவாசம் எங்களுக்கு இருக்காது. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் அந்தப் போதுமான நாமத்தில் நாங்கள் வரும்போது, நாங்கள் எதைக் கேட்கிறோமோ அதைத் தேவன் அருளுவார் என்ற உறுதி எங்களுக்கு இருக்கிறது. 30 ஆகையால், நாங்கள் எதையேனும் தவறாகக் கேட்கப்போகிறோமா, நாங்கள் இங்கு வந்ததிலோ அல்லது நாங்கள் கேட்பதிலோ ஏதேனும் தவறான நோக்கம் இருக்கிறதா, அல்லது அத்தகைய காரியங் களைக் கேட்பதில் எங்களுக்கு இருக்கும் உள்நோக்கம் என்ன என்று பார்க்க, எங்கள் ஜெபத்தை நாங்கள் எடைபோட்டுப் பார்க் கிறோம். எனவே, தேவனே, நீர் எங்கள் இருதயங்களைச் சோதித்தறியும்படி நாங்கள் ஜெபிக்கிறோம், ஏனென்றால் நாங்கள் இந்த ஆலயத்தில் உம்முடைய பரிசுத்த சமுகத்தில் நிற்கிறோம், நாங்கள் நித்தியத்திற்கு ஏதுவான ஜனங்கள் என்பதையும், நீர் எங்களை எந்த மண்ணிலிருந்து எடுத்தீரோ அதே மண்ணுக்கு நேராக எங்கள் தலைகள் தாழ்த்தப் பட்டிருப்பதையும் அறிந்து நிற்கிறோம். 31 ஒரு நாள் நீர் இயேசுவை அனுப்புவீர்கள் என்று நாங்கள் பயபக்தியுடன் நம்புகிறோம். மேலும், இந்த மண் சரீரத்திலிருந்து நாங்கள் எடுக்கப்பட்டு, அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மாற்றப்படுவோம், அங்கே வியாதிகளுக்காக இனி ஜெபிப்பதில்லை. இழந்து போனவர் களுக்காக விடிய விடிய நடக்கும் ஜெபக் கூட்டங்கள் இராது, ஆனால் மீட்கப் பட்டவர்கள் நகரத்தில் இருப்பார்கள், அதின் வெளிச்சத்திலே என்றென்றும் நடப்பார்கள். ஓ, எங்கள் இருதயங்கள் அதற்காக ஏங்குகின்றன. 32 ஆனால் பகலாயிருக்கையில், எங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, உம்முடைய தெய்வீக வழி நடத்துத லுக்காகவும் இரக்கங்களுக்காகவும் உம்மை நெருங்குகிறோம் ஆண்டவரே. கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும், அவர் மரிக்கவில்லை, அவர் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்ற உண்மைக்கு, இந்தச் சிறிய நகரத்தில் இன்று ஒரு பெரிய விழிப்புணர்வை நீர் கட்டளையிடுவீர் என்று நாங்கள் நம்புகிறோம். 33 "நீங்கள் ஒரு பட்டணத்தில் பிரவேசிக்கும்போது, அந்தப் பட்டணத் திலுள்ள நோயாளிகளைக் குணமாக்குங்கள்," என்று சீஷர்களிடம் நீர் சொன்ன வேதம் நிறைவேறும்படி செய்யுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம் ஆண்டவரே. பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முதலில் சுகமடையவும், பின்னர், சரீரத்தில் பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் சுகமடையவும் நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே. 34 மேலும் இந்தச் சிறிய பள்ளத்தாக்கிலே ஒரு எழுப்புதல் பரவட்டும், அது ஒரு பெரிய பசியையும் தாகத்தையும் உண்டாக்கட்டும், ஏனென்றால், "நீங்கள் பூமிக்கு உப்பாயி ருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப் போனால்... அது வெளியே கொட்டப் படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப் படுவதற்குமே ஒழிய, வேறொன்றுக்கும் உதவாது," என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்டவரே, கிறிஸ்து எங்கள் வாழ்க்கையில் மிகவும் உண்மையாக இருக்கும்படிச் செய்யும், அப்போது மக்கள் அவருக்காகத் தாகம் கொள்வார்கள். அவரே ஈர்ப்பின் மையமாக இருக்கட்டும் ஆண்டவரே. அதற்காக நாங்கள் மனத் தாழ்மையுடன் உம்மைத் துதிக்கிறோம், மேலும் தாழ்மையுடன் தலைவணங்கி, உமக்கே எல்லாத் துதியையும் செலுத்துகிறோம். 35 இங்கிருக்கும் போதகரை ஆசீர்வதியும், மற்றும் உதவி போதகர்கள், நகரத்திலும் சமூகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு சபை யையும், ஒவ்வொரு சபையின் உறுப் பினர்களையும் ஆசீர்வதியும். நாங்கள் ஒரே இருதயத்தோடும் ஒரே சிந்தையோடும் வந்து, உயிர்த்தெழுந்த நம்முடைய கர்த்தரின் மகிமையைக் காண்போமாக. அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 36 கூட்டங்களை அறிமுகப்படுத்தும் விதமாக, நாங்கள் ஒவ்வொரு நாளும் வந்து, இந்தச் சிறிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவோம் என்று சொல்ல விரும்புகிறேன். ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் சகோதரர் சோத்மன் அவர்களைக் கேட்கலாம், அவரும் போதகர்களும் உங்களை வழிநடத்த முடியும். 37 மதக் கருத்துக்கள் குறித்த கேள்வி களுக்கு, நான் பதிலளிக்க முயற்சிப் பதில்லை, ஏனென்றால் அது போதகரின் வேலை, நான் விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு சபையும் தங்கள் போதகர் ஒரு தேவ மனிதர் என்றும், அவரே இதுவரை அவர்களைப் பாதுகாப்பாக வழிநடத்தினார் என்றும், எனவே அவர் அவர்களைத் தொடர்ந்து அழைத்துச் செல்ல முடியும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும், பாருங்கள். 38 எனவே இப்போது, விசுவாசத்தோடு வாருங்கள். அநேகமாக, அடுத்த கூட்டத் திலோ அல்லது அதற்கடுத்தோ, பெந்தெ கொஸ்தே மற்றும் பூரண சுவிசேஷ வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் வரக்கூடும். நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு, நாம் உறுதியாக இருக்க விரும்புகிறோம், ஏனென்றால் தான் எங்கே நடக்கிறோம் என்று உறுதியாகத் தெரியாமல் எந்த மனிதனும் நடக்க முடியாது. பாருங்கள்? நாம் எங்கே நிற்கி றோம் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் தேவன் ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக்கொண்டு, அதை மெய்யாக்குகிறார் என்று நம்பி, நாம் வேதவசனங்களோடு நடக்கிறோம். பாருங்கள்? நீங்கள் அதை நம்பவில்லை என்றால், நம்மால்-நம்மால் தேவனோடு நடக்க முடியாது. 39 மேலும் இப்போது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு... ஒவ்வொரு கூட்டத் திற்கும் முன்பு, பையன்கள் வந்து கொடுப்பார்கள், அல்லது, பில்லி, வழக்கமாக லியோ மற்றும் ஜீன் என்ற இரண்டு கூட்டாளிகள் பெரிய பிரச்சாரக் கூட்டங்களில் கூட இருப்பார்கள், அவர்களும் அட்டைகள் கொடுக்க உதவுவார்கள். ஆனால் என் மகன் இம்முறை கூட வந்திருக்கிறான், ஒவ்வொரு கூட்டத்திற்கும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவன் உங்களுக்கு ஜெப அட்டைகளைக் கொடுப்பான், எனவே கூட்டத்தைக் கேட்க வருகிறவர்களுக்கு, அறிமுகக் கூட்டங்கள் மற்றும் இது போன்றவற்றுக்கு நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். 40 இப்போது, சில நேரங்களில் போத கர்கள் வாசிப்பதை வேத குறிப்பாக நீங்கள் குறித்துக்கொள்வீர்கள் என்றால், அறிமுகத் திற்காகப் புதிய ஏற்பாட்டில், யோவான் சுவிசேஷம் 12-ம் அதிகாரம் 32-ம் வசனத்தை உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன், இதிலிருந்து ஒரு உரையை இந்தச் சூழலுக்காக எடுக்க விரும்புகிறேன். இயேசு பேசிக்கொண்டிருந்தார். ஓ, அவர் பேசுவதைக் கேட்க நான் விரும்பியிருப்பேன். எனக்குத் தெரியும், நாம் அனைவரும் அதற்காகப் பசியோடு இருக்கிறோம். நான் பூமியிலிருந்து உயர்த்தப் பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்... 41 இப்போது, அமெரிக்காவில் எங்களிடம் ஒரு சிறிய பாடல் இருக்கிறது, "நான் உயர்த்தப்பட்டால்" (If I Be Lifted Up) என்று நாங்கள் அதைப் பாடுவோம். இப்போது, தேவன் ஏற்படுத்திய வழி என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன். தேவன் ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். 42 இப்போது, உலகத்திலுள்ள மனிதன் எதையாவது சாதிக்க, தானே எதையாவது செய்ய முற்படுகிறான். அவன்... அவன் அதைத் தானே செய்ய விரும்புகிறான். நான்... அது அப்படி அமைக்கப் பட்டிருப்பதற்காக வருந்துகிறேன், ஆனால் மனித இனம் அப்படித்தான் இருக்கிறது. மனிதன் தனக்காக ஒரு சாதனையைப் படைக்க எதையாவது செய்ய முயற் சிக்கிறான். 43 நேற்று நான் நெடுஞ்சாலைகளில் வரும்போது, இங்குக் கீழே உள்ள இரண்டு பெரிய நகரங்களான கால்கரி மற்றும் எட்மன்டன் வழியாகக் கடந்து வந்தேன். நான் கொஞ்சம் பெட்ரோல் வாங்கச் சென்றபோது என் மகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் பம்பைப் பார்த்த போது, அதில் "ஒரு கேலன் முப்பத்தொன்பது சென்ட்" என்று போட்டிருந்தது, நான் சொன்னேன், "அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை." 44 அமெரிக்காவில் இந்த பெட்ரோலுக்கு நாங்கள் ஒரு கேலனுக்கு முப்பத்தைந்து சென்ட் கொடுக்கிறோம், அவர்கள் அதை இங்கே கொண்டு வருகிறார்கள். நான்கு குவார்ட்ஸ் கேலனுக்குப் பதிலாக, முப்பத்தொன்பது சென்ட்க்கு ஐந்து குவார்ட்ஸ் கேலன் கொடுக்கிறார்கள். ஆகையால், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தாலும், அமெரிக் காவில் விற்பதை விட மலிவாக இங்கே புல்வெளிப் பகுதிகளில் அவர்களால் விற்க முடிகிறது. அரசாங்கம் இதை வாங்குகிறது, பின்னர் நுகர்வோர் விற்கிறார்கள், நிச்சயமாக, பின்னர் அரசாங்கம் நுகர்வோரிடமிருந்து அதற்கான வரிகளைத் திரும்பப் பெற்று, அரசாங் கத்திற்கு எடுத்துக்கொள்கிறது. பில்லி என்னிடம், "அது நியாயமாகத் தோன்றுகிறதா, அப்பா?" என்று கேட்டான். நான் சொன்னேன், "சரி, நம்மைவிட அவர்கள் நன்றாக வாழ்வதை நாம் பார்க்கிறோம்." 45 இப்போது, நீங்கள் கவனித்தால், கனடாவைப் பற்றி இதைச் சொல்ல விரும்புகிறேன். இயேசு தாமதித்தால், ஒரு ஐம்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்வோம், இந்தத் தேசம் உலக நாடுகளை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இயேசு தாமதித்தால், இது உலகின் மிகச்சிறந்த தேசமாக இருக்கும். ஏனென்றால் இது உங்கள் உறுதியான அரசாங்கம், பாருங்கள், மற்றும் காரியங்கள், கட்டியெ ழுப்புவதற்கு உங்களிடமுள்ள இயற்கை வளம். 46 இப்போது, உங்கள் நிலங்கள் எண்ணெய் மற்றும் தாதுக்களால் மூடப் பட்டிருக்கின்றன, உங்கள் மலைகள் தங்கம், வெள்ளி, யுரேனியம், பொட்டாஷ் மற்றும் பலவற்றால் நிரம்பியுள்ளன. உங்களிடம்... நீங்கள் அமெரிக்காவை விட ஒன்றரை மடங்கு பெரியவர்கள், கனடா நாடு. 47 இருப்பினும் நியூயார்க் மாநிலத்தில், முழு கனடா நாட்டிலும் உள்ளதைவிட, நியூயார்க் மாநிலத்தில் மட்டும் இரண்டு லட்சத்து தொண்ணூற்றாறாயிரம் மக்கள் அதிகமாக உள்ளனர். இங்கே உங்களுக்கு... உங்களிடம் மக்கள் தொகை அடர்த்தியாக இல்லை, அது ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் மக்கள் தொகை, அதாவது மனிதர்கள் ஒன்றாகக் கூடத் தொடங்கும்போது, பாவம் உள்ளே நுழைகிறது. இன்று காலை நானும் என் மகனும் பேருந்து நிலையத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவன் சொன்னான், "அப்பா, நான் இங்கே வாழ விரும்புகிறேன்." "ஓ," நான் சொன்னேன், "யார் விரும்ப மாட்டார்கள்?" பாருங்கள்? இது ஒரு பரதேசி. ஒருவேளை நீங்கள் அதை உணராமல் இருக்கலாம். 48 பெண்களைப் போலப் பலர், பெரிய நகரங்களுக்காக ஏங்குகிறார்கள், பல நேரங்களில். அப்படி, ஒருபோதும் அதற்கு ஏங்காதீர்கள். ஓ, என்னே! எந்த நேரத்திலும் இதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பிள்ளை களை வளர்ப்பதற்கு இதுவே சிறந்த இடம். எனக்குத் தெரிந்த எந்த இடத்தையும் விட, உங்கள் பிள்ளைகளுக்கு அதிகமாகக் கொடுக்க, உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கக்கூடிய இடம் இதுவே. 49 உங்கள் பணம் உலகின் வேறெந்த நாட்டை விடவும் அதிக மதிப்புடையது, அல்லது அதற்கு இணையானது. ஏன்? ஏனென்றால் நீங்கள் உங்கள் கோதுமையை விளைவிக்கிறீர்கள், அரசாங்கம் அதை எடுத்து உங்களுக்காக விற்கிறது, பணம் ரொக்கமாக வைக்கப்பட வேண்டும். 50 இப்போது, அமெரிக்காவில், விவசாயி கோதுமையை விளைவிக்கிறார், அரசாங்கம் அவருக்கு அரசாங்க நிதியிலிருந்து பணம் செலுத்துகிறது, பின்னர் அதை எடுத்து, மற்ற நாடுகளுக்குக் கொடுக்கிறது, அவர்கள் ஒரு போதும் அதற்குப் பணம் செலுத்துவதில்லை. அவர்களில் சிலர் நூற்றுக்கணக்கான ஆண்டு களாகக் கடன்பட்டிருக்கிறார்கள், ஒருபோதும் செலுத்துவதில்லை. அது அரசாங்க நிதியிலிருந்து வருகிறது, அது தேசத்தை அரித்துக்கொண்டிருக்கிறது. விரை வில் அது விழப்போகிறது, அவ்வளவுதான். 51 இப்போது, எங்களிடம் இனி இயற்கை வளங்கள் இல்லை; உங்களிடம் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன, ஏனென்றால், நானும் நீங்களும்... நான் கோதுமைக்காக உங்களுக்கு அரிசி விற்கிறேன், ஆனால் அரிசி தீர்ந்துபோனால், பிறகு என்ன? பாருங்கள்? 52 இப்போது, உங்களிடம் இயற்கை வளம் உள்ளது, எனவே உலகில் உள்ள எந்த இடத்தையும் விட அதிகமாக, நீங்கள் வளர்ந்து வரும், முன்னேறி வரும் தேசமாக இருக்கிறீர்கள். நான் சொன்னேன், "எனக்கு ஐந்து வயதுடைய ஒரு சிறுவன் இருக்கிறான்." நான் சொன்னேன், "இங்கே ஒரு கனடிய மனிதர், தன்னுடைய ஐந்து வயது மகனிடம், 'மகனே, இந்தத் தேசத்திற்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிற ஒரு தேசத்தில் நான் உன்னை வளர்க்கிறேன்,' என்று சொல்ல முடியும்." நான் சொன்னேன், "பிறகு, ஒரு அமெரிக்கர் அங்கே கீழே இருக்கும் தன் மகனுக்குக் கொடுப்பதை விட, ஒரு தேசத்தின் கண்ணோட்டத்தில் இவர் தன் பிள்ளைக்கு அதிகமாகக் கொடுக்க முடியும், ஏனென்றால் உங்களுக்கு இங்கே அதிகப் பின்னணி இருக்கிறது, நம்பிக்கைக்குரிய ஒன்று இருக்கிறது," மற்றும் பல. 53 இப்போது, ஆனால் ரஷ்யா எப்போ தாவது அமெரிக்காவிற்கு வந்தால், அது மேற்கத்திய உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று, அவர்கள் அதை வெடிக்கச் செய்ய விரும்ப மாட்டார்கள், அவர்கள் விரும் பினால் இப்போதே அதைச் செய்ய முடியும், அல்லது நாம் அதை வெடிக்கச் செய்ய முடியும். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றையும் அழித்துவிடுவார்கள், அவர் களுக்குத் தேசத்தின் செல்வம் வேண்டும், எனவே, அவர்கள் மக்களைத் தூங்க வைக்க முயற்சிப்பார்கள். 54 மேலும் ஒன்று, போர் ஒரு ஏவுகணைப் போராக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது ஒரு ஆவிக்குரிய போராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அது உள்ளே வந்து தேசத்தைக் கைப்பற்றி, அவர்கள் உள்ளே நுழைந்து பிடித்துக்கொள்ளும் வரை மக்களைத் தூங்க வைக்கும். சரி, அவர்கள் அங்கே பிடித்துக்கொண்டு அமெரிக்காவைக் கைப்பற்றினால், கனடா அவர்களுக்கு ஒரு சிறிய விஷயம். 55 ஆகையால், உண்மையில் இந்த உலகத்தில் நாம் நம்பிக்கையை வைக்கக் கூடியது எதுவுமில்லை, பாருங்கள், இந்த உலகத்தில் நாம் கொடுக்கக்கூடிய எந்தச் சாதனையின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது, ஏனென்றால் அதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஒரே ஒரு நம்பிக்கை மட்டுமே உள்ளது, அது கிறிஸ்துவே, அது உண்மை. 56 ஏனென்றால், இன்று அறிவியல் எதையாவது உருவாக்க முயற்சித்தால் என்ன செய்வது? ஒரு... ஒரு... ஒரு வெடிகுண்டு மேலே செல்லும் அல்லது ஏதோ... ஒரு மனிதனை ஸ்புட்னிக்கில் (sputnik) வைத்து வானத்தில் அனுப்புகிறார்கள். ரஷ்யா சமீபத்தில் உலகையே அதிர வைக்கும் ஒரு காரியத்தைச் செய்தது, அவர்கள் வானத்தில் ஒரு மனிதனைக் கொண்டிருந்தார்கள், விண் வெளியில் ஒரு மனிதனை அனுப்பினார்கள். 57 சரி, அதைப் பற்றிப் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டு களாக விண்வெளியில் நமக்கு ஒரு மனிதர் இருக்கிறார்: இயேசு கிறிஸ்து. சும்மா இங்கே கொஞ்சம் தூரம் மேலே போய்விட்டுத் திரும்பி வருவதற்கு அல்ல, மகிமைக்குள் முழுமையாகச் சென்று, நமக்கு ஊழியம் செய்யத் தூதர்களின் சேனைகளுடன் திரும்பி வருவதற்கு. எனவே நமக்கு நீண்ட காலமாக விண்வெளியில் ஒரு மனிதர் இருக்கிறார், ரஷ்யாவிடம் நம்மை மிஞ்சும் எதுவும் இல்லை. அந்த மனிதர் தங்கும்படித் திரும்பினார், இயேசு தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல முடியும். 58 எனவே நாம்... நாம் இதைச் சொல்லலாம்: இன்று, இப்போது, என் கனடியச் சகோதர சகோதரிகளே, இன்று அறிவியல் ஒரு சிறிய கருவியை உருவாக்கி, அதை ஒரு மனிதனின் பண்ணையின் ஓரத்தில் வைத்து, அதை ஆன் (on) செய்தால் மழை வரும்படி, வானத்திலிருந்து மழையைக் கொண்டுவரும்படி, அல்லது அதை ஆஃப் (off) செய்தால், சூரியன் பிரகாசிக்கும்படி, உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்யக்கூடிய ஒன்றை முழுமைப்படுத்தினால் என்ன செய்வது? அது ஒரு சாதனையாக இருக்குமா! ஓ, என்னே! 59 புற்றுநோயால் சாகிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனைத் திரும்பவும் குணமாக் கக்கூடிய ஒன்றை உருவாக்க முடியும் என்று அவர்கள் சொன்னால் என்ன செய்வது? அது ஒரு சாதனையாக இருக்காதா! குழந்தை களுக்கான சால்க் (Salk) தடுப்பூசி போல, அது உலகம் முழுவதும் சென்றது. 60 ஆனால், உதாரணமாக, அறிவியல் ஒரு சிறிய மருந்தைக் கண்டுபிடித்தால், அதை ஒரு ஸ்பூனில் எடுத்து, ஒரு வயதா னவரின் வாயில், அல்லது தொண்ணூறு வயதுடைய ஒரு மூதாட்டியின் வாயில் ஊற்றி, நோயாளியைச் சுமார் ஒரு நிமிடம் கவனித்து, அவர்கள் மீண்டும் ஒரு வாலிபனாகவும் வாலிபப் பெண்ணாகவும் திரும்புவதைப் பார்த்தால். ஒருபோதும் முதுமையடையாத இரத்தத் தோடும், ஒரு போதும் மரிக்காத சரீரத்தோடும் இருந்தால் என்ன செய்வது? ஆஹா, விசில்கள் ஊதப்படும், தேசங்கள் கத்தும், "மரணம் முடிந்துவிட்டது, இனி முதுமை இல்லை, இனி மரணம் இல்லை, நாங்கள் அதை ஜெயித்துவிட்டோம்." ஆஹா, அது ஒரு பெரிய காரியமாக இருக்கும்! 61 மனிதர்கள் இலக்கியம், அல்லது கலாச்சாரம், கல்வி, அறிவியல் ஆகியவற்றின் வளங்கள் மூலமாக அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களை அதைத் தேட வைப்பது எது? ஏனென்றால் அது எங்கேயோ இருக்கிறது. அதனால்தான் அவர்கள் அதற்காக ஏங்குகிறார்கள். தாவீது சொன்னது போல, "ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது," ஒரு ஆழம் கூப்பிடுவதற்கு முன்பு, அந்தக் கூப்பிடுதலுக்குப் பதிலளிக்க அங்கே ஒரு ஆழம் இருக்க வேண்டும். 62 ஒரு மீனின் முதுகில் துடுப்பு இருப்பதற்கு முன்பு, அது நீந்துவதற்கு முதலில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அதற்குத் துடுப்பு இருந்திருக்காது. பூமியில் வளர்வதற்கு ஒரு மரம் இருப்பதற்கு முன்பு, முதலில் ஒரு பூமி இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் மரம் இருந்திருக்காது. 63 நான் அடிக்கடி சொல்வது போல, சில காலத்திற்கு முன்பு, அமெரிக்காவில், ஒரு சிறுவன் பள்ளியில் தன் பென்சிலின் ரப்பர் அழிப்பான்களை (erasers) தின்று கொண்டி ருந்தான். பின்னர் அவன் தாய் அவனைக் கொல்லைப்புறத் திண்ணையில், ஒரு மிதிவண்டியின் பெடலை, ஒரு ரப்பர் பெடலைத் தின்று கொண்டிருப்பதைக் கண்டார். அவர்கள் அந்தச் சிறுவனைப் பரிசோத னைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள், அவர்கள் சோதித்தபோது, அவனது சிறிய உடலுக்குச் சல்பர் (sulfur) தேவைப்படுவதைக் கண்டார்கள். எனவே, ரப்பரில் சல்பர் இருக்கிறது, அங்கே அவன் ரப்பரைத் தின்னும்போது, அந்தச் சல்பர் தேவையைத் திருப்திப்படுத்திக் கொண்டி ருந்தான். 64 ஆனால் ஓ, நான் இதைச் சொல்லுகிறேன்: அங்கே சல்பருக்கான ஏக்கம் இருப்பதற்கு முன்பாக, அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய எங்கேயோ சல்பர் இருந்திருக்க வேண்டும். 65 ஒரு மனித இருதயத்தில் சமாதான இடத்தைக் காண, பரிபூரணமான இடத்தைக் காண, ஜீவனைக் காண, அந்த இடத்தை, இளமையின் ஊற்றைக் காண ஒரு ஏக்கம் இருக்கும்போது, அதில் முதியவர்கள் குளித்து மீண்டும் வாலிபர்களாகத் திரும்பும் அந்த இடம், முதலில் இருந்தாக வேண்டும், இல்லையென்றால் மனித இனம் அதற்காக ஒருபோதும் ஏங்கியிருக்காது. 66 நாம் இந்தச் சிறிய கூட்டத்தில் தெய்வீக சுகத்தைப் பற்றிப் பேசுவதற்காகக் கூடியிருக்கிறோம். எங்கேயோ ஒரு ஊற்று திறக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லை யென்றால் நீங்கள் அதற்காக ஒருபோதும் ஏங்கியிருக்க மாட்டீர்கள். இன்று காலை உங்கள் இருதயங்களில், மக்களே, சுகமளிக்கக் கூடிய ஒரு தேவன் இருக்கிறார் என்று சொல்லும் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த ஏக்கம் உங்கள் இருதயத்தில் இருப்பது எவ்வளவு உறுதியோ, அந்த ஏக்கத்தைத் திருப்திப்படுத்த எங்கேயோ ஒரு ஊற்று இருந்தாக வேண்டும், இல்லை யென்றால் உங்களுக்கு அந்த ஏக்கம் ஒருபோதும் இருந்திருக்காது. 67 வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு சிருஷ்டிப்பு இருப்பதற்கு முன்பு, உங்கள் இருதயத்தில் அந்தச் சிருஷ்டிப்பை உண் டாக்க ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டும். இது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன், ஒரு சிருஷ்டிப்பை உண்டாக்க ஒரு சிருஷ்டிகர். எனவே சிருஷ்டிப்பு முதலில் இருக்க வேண்டும், பின்னர் அதற்காக ஏங்க ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டும். 68 இப்போது, மனிதன் அறிவியலின் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முயற்சிக் கிறான், ஆனால் அது இருக்கிறது என்பதையே அது காட்டுகிறது. இப்போது, மனிதன் ஏன் அதை விட்டுவிடுவதில்லை? எதையாவது பொய்யாக்கவோ அல்லது நிரூபிக்கவோ அவர்கள் தரையில் தோண்டிப் புதைபடிவங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் காற்றின் அணுக்களைப் பிடித்து உடைத்து, மூலக்கூறுகளைப் பெறுகிறார்கள், எதையாவது நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். 69 அவர்கள் அதே ஏவுகணைகளை எடுக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் அறிவியல் ரீதியாக எதையாவது உருவாக்க முயற்சிக்கும்போது, அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான், எல்லா நேரமும் தேவனை விட்டுத் தூரமாகத் தள்ளப் படுகிறான். சாதனையை நோக்கி நெருங்கிச் செல்வதற்குப் பதிலாக, அவன் சாதனையை விட்டுத் தன்னைத் தூர விலக்கிக் கொள்கிறான். 70 அவன் வெடிமருந்தைக் கண்டு பிடித்தபோது, தன் சகோதரனைக் கொன்றான். அவன் ஒரு காரைக் கண்டுபிடித்தபோது, அறிவியல், அவன் என்ன செய்தான்? வெடிமருந்தை விட அதிகமானோரைக் கொல்கிறான். இப்போது, அவனிடம் அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது. பாருங்கள், அவன் தன்னை தேவனை விட்டு வெகுதூரம் விரட்டுகிறான். 71 ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் இருந்தன, அவற்றில் ஒன்று ஜீவ விருட்சம், மற்றொன்று மரண மரம், ம்ம், நன்மை தீமை அறியத்தக்க மரம் (tree of knowledge). மனிதன் ஜீவ விருட்சத்தை விட்டு விலகி, நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து புசித்தபோது, அவன் எடுத்த முதல் கடியே, அவனைத் தன் சிருஷ்டிகரிடமிருந்து பிரித்தது. 72 அவன் அந்த அறிவியல் மற்றும் அறிவு மரத்தைக் கடிக்கும் ஒவ்வொரு முறையும், அவன் தன்னைத்தானே கொன்று கொள்கிறான், தன்னை வெகுதூரம் விரட்டிக் கொள்கிறான். அவன் ஏன் வெறுமனே அந்த விருட்சத்திற்குத் திரும்பக் கூடாது? அதுவே ஒரே தீர்வு, தேவன் அவனை முதல் முறையாக உருவாக்கிய வழிக்குத் திரும்புவதுதான். 73 இப்போது, மனிதன் எல்லாக் காலத்திலும் சாதிக்க முயன்றிருக்கிறான். இப்போது நாம் நிம்ரோத் பற்றிக் கருது வோம், ஒருமுறை தேவன் உலகத்தை ஜலத்தினால் அழித்ததை அவன் நினைக்கும் போது, பாபிலோனின் இந்தப் பெரிய இளவரசன், "என்னால் அதைத் தவிர்க்க முடியும்," என்று சொன்னான். பாருங்கள், அவன் எதையாவது கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், அது அவன் சுபாவம், மனிதன் அப்படிச் செய்கிறான். 74 ஆதாம் நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து கடித்தபோது அவன் தன் சுபாவத்தை நிரூபித்தான், தன்னைத் தேவனிடமிருந்து பிரித்துக்கொண்டான், அத்தி இலைகளால் தன்னை மூடிக்கொண்டு தேவனிடம் திரும்ப தனக்கென ஒரு வழியை உருவாக்க முயன்றான், அது ஒரு மதம், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வது, பரி காரம் (atonement) இல்லாமல் இரட்சிப்பை உருவாக்க முயன்றான். 75 இன்றும் மனிதன் அதே காரியத்தைச் செய்வதை நாம் காண்கிறோம், சபையில் சேருவது, ஒரு புத்தகத்தில் தன் பெயரை எழுதுவது, சில ஜெபங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் சொல்வதன் மூலம் ஒரு வழியைக் காண முயல்வது. ஓரிரு விசுவாசப் பிரமாணங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது, பரிகார மில்லாமல் இரட்சிப்பைக் காண முயல்வது. உங்களால் முடியாது, பாவத்திற்கு ஒரு பரிகாரம் இருந்தாக வேண்டும். பாவம் என்பது அவிசுவாசம், அவிசுவாசத்தைத் தவிர வேறு பாவம் இல்லை. 76 குடிப்பதும், விபச்சாரம் செய்வதும், ஆணையிடுவதும் பாவம் அல்ல, அவை பாவத்தின் குணாதிசயங்கள், நீங்கள் ஒரு அவிசுவாசி, அதனால்தான் அதைச் செய்கி றீர்கள் என்று நான் அடிக்கடி சொல்லி யிருக்கிறேன். ஆனால் நீங்கள் தேவனை விசுவாசித்திருந்தால், அதைச் செய்ய மாட் டீர்கள். பாருங்கள்? நீங்கள் ஒரு விசுவா சியாக இருந்தால் உங்களால் அதைச் செய்ய முடியாது. 77 இப்போது, மனிதன் தன்னை தேவனி டமிருந்து பிரித்துக்கொண்டு, எப்பொ ழுதும் அதே நன்மை தீமை அறியத்தக்க மரத்தைப் பயன்படுத்தித் திரும்ப வர முயற்சிக்கிறான், எல்லா நேரமும் தன்னை வெகுதூரம் கொண்டு செல்கிறான் என்பதை நாம் காண்கிறோம். 78 ஆகையால், நிம்ரோத் அதற்குப் பிறகு உடனடியாகத் தனக்கென ஒரு கோபுரத்தை, ஒரு மதக் கோபுரத்தைக் கட்ட முயன்றதைக் காண்கிறோம், தேவன் மீண்டும் உலகத்தை அழித்தால், அவன் என்ன செய்வான்? அவன் மேலே ஏறி, தன் மக்களையும் அழைத்துக் கொண்டு, வெள்ளத்திற்கு மேலே, கோபு ரத்தின் உச்சிக்குச் செல்வான், அவன் அதற்கு மேலே போய்விடுவான். அதற்கு என்ன வந்தது, அது என்னவாயிற்று? அவனுடைய எல்லாச் சாதனைகளும், தனக்கென ஒரு பெரிய பெயரை உண்டாக்கிக்கொண்டதும், அவனும் அவனது கோபுரத்தோடு அழிந்தான். 79 பின்னர், நேபுகாத்நேச்சார் என்ற ஒரு ராஜா இருந்தான். அவன் ஒரு நகரத்தைக் கட்ட முடியும் என்று நினைத்தான், உள்ளே அறிவியலை வைத்தான், அவனுடைய பெரிய வேலையாட்கள். அவன் என்ன செய்தான்? பாபிலோன் என்று அழைக்கப்பட்ட இந்தச் குறிப்பிட்ட நகரத்தைச் சுற்றி ஒரு மதிலை எழுப்பினான். அதன் மேல் அவர்கள் ரதப் பந்தயம் நடத்த முடியும். வாசல்கள், எழுபது அடி அகலம் என்று நினைக்கிறேன். அவை மிகவும் பெரியவை, வாசலைத் திறந்துவிட ஏறக்குறைய ஒரு படைப்பிரிவு வீரர்கள் தேவைப்பட்டார்கள். எந்த மனிதனும் அதை நெருங்க முடியாது. 80 அவன் எதையாவது சாதித்துவிட்டதாக நினைத்தவுடனே, அவன் பாவத்தில் இன்னும் அதிகமாக ஈடுபடுகிறான். 81 ஒரு சபை, "நாங்கள் இன்னார், நாங்கள் பெரிய சபை, நாங்கள் மிகப்பெரிய சபை," என்று நினைக்கத் தொடங்கும்போது, அவர்கள் தங்கள் மக்களைப் பாவம் செய்யவும், அவிசுவாசத்தில் இருக்கவும் சுயாதீனமாக விட்டுவிடுகிறார்கள், "அற்புதங் களின் நாட்கள் முடிந்துவிட்டன, எங்களுக்கு இனி அது தேவையில்லை." 82 அவன் எதையாவது செய்துவிட்டதாக, ஒரு சாதனையைப் படைத்துவிட்டதாக நினை த்தவுடனே, அதற்காகத் தேவன் ஏற்படுத்திய வழியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, அவன் தானே ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், "நான் எதையோ செய்தேன்," என்று சொல்லக்கூடிய ஒன்றை. மனிதன் செய்யும் ஒரு காரியத்தினால் அவன் இரட்சிக்கப்பட முடியாது. இரட்சிப்பு கிருபையினால் வருவது, கிரியைகளினால் அல்ல, கிருபையினாலேயே, அது தேவன் உங்களுக்குக் கொடுப்பது. 83 இப்போது, நேபுகாத்நேச்சார் தான் ஒரு பெரிய சாதனையைப் படைத்துவிட்டதாக உணர்ந்தவுடனே, ஒரு நாள் தன் உப்பரிகையில் நடந்து சென்று, "நான் என்ன செய்திருக்கிறேன் என்று பாருங்கள்," என்று சொன்னான், தேவன் அவன் இருதயத்தை மாற்றி, அவனை வெளியின் மிருகமாக மாற்றினார். 84 அவனுடைய பேரன் பெல்ஷாத்சார் வந்தான், அவன் நேபுகாத்நேச்சாரின் பேரன், அவன் தன் தாத்தாவிடமிருந்து, அந்தப் பெரிய ஸ்தாபனத்தை, அல்லது தாத்தா உருவாக்கியது எதுவோ அதை எடுத்துக் கொண்டான், அதில் அவன் சுகபோகமாக வாழ்ந்து வந்தான். 85 இன்று நம்முடைய சபைகள் பலவும், ஆரம்பத்திலிருந்த பெரிய சீர்திருத்தவாதிகளின் அஸ்திவாரத்தின் மேல் ஒரு சபையை உண்டாக்கியுள்ளன, நாம் ஒரு இரட்சிப்பின் திட்டத்திற்குப் பதிலாக வெறும் ஒரு சமூகத் திட்டத்திற்குள் செல்ல முயற்சிக்கிறோம், "நாங்கள் இன்ன சபையைச் சேர்ந்தவர்கள், நாங்கள் இன்ன சபையின் உறுப்பினர்கள்," என்று சொல்லுகிறோம். இரட்சிப்பிற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 86 இரட்சிப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் வரும் ஒரு மறுபிறப்பு, அது நம்மை எல்லா அவிசுவா சத்திலிருந்தும் சுத்திகரித்து, தேவனுக்கென்று விசேஷித்த ஜனமாக நம்மைப் பிரிக்கிறது. இரட்சிப்பு, நாம் சாதித்த ஒன்றல்ல. நம்மால் அதைச் செய்ய முடியும் என்று நினைத்து, நாம் நம்மை முட்டாளாக்கிக் கொள்கிறோம். 87 இப்போது கவனியுங்கள், பெல்ஷா த்சார் எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தபோது, சர்வவல்ல மையுள்ள தேவனுடைய பரிசுத்தமான வைகளைப் பரியாசம்பண்ணத் தொடங் கினான். அவன் பரிசுத்தமாக்கப்பட்ட பாத்தி ரங்களில் சிலவற்றை எடுத்து, அவற்றில் திராட்சரசத்தைக் குடிக்கத் தொடங்கினான், மேலும் நம்முடைய... இன்றைய நவீன காலங்களில் நடப்பது போல, தேவனுடைய பரிசுத்தமான வைகளைப் பரியாசம்பண்ணி, நகைச்சுவை செய்யத் தொடங்கினான். "அவர்கள் ஒரு கும்பல் 'புரளுகிறவர்கள்' (holy-rollers), அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, அவர்கள் அப்படிப் பட்டவர்கள்," என்று சொல்லுகிறார்கள். 88 உங்களுக்குத் தெரியுமா, இன்று உலகத்தில் ஏறக்குறைய அதே வகையான பெல்ஷாத்சார் விருந்து நம்மிடம் இருக்கிறது? மக்களைப் பரியாசம்பண்ணி, "அவர்கள் மதவெறியர்கள், மத கிறுக்கர்கள், நாங்கள் அவர்களுடன் எங்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டோம்," என்று சொல்லுகிறார்கள். இந்த மதிலுக்குப் பின்னால் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியும், தேவனால் மேலிருந்து பார்க்க முடியும். நான் உங்களை நோக்கிச் சத்தமிடுவதால் உங்கள் காதுகளை செவிடாக்கவில்லை என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் பெரிய அரங்கங்களில் பேசுவதற்குப் பழகிவிட்டேன். நான் கொஞ்சம் குறைத்துக்கொள்கிறேன். பாருங்கள்? 89 இப்போது, அவன் தன்னிடம் ஏதோ இருப்பதாக நினைக்கும்போது, தேவன் இறங்கி வந்து, பெல்ஷாத்சாரின் விளை யாட்டு வீட்டை அழித்தது போல, அவனுடையதை அழிக்கிறார். 90 நமது அன்பான அமெரிக்க ஐக்கிய நாடுகள், கடலின் ராணியான இங்கிலாந்தின் சந்ததியாயிருப்பதால், நம்மால் எதையாவது சாதிக்க முடியும் என்று நினைத்தோம். நாம் என்ன செய்கிறோம்? நாம் ஒரு கப்பலைக் கட்டினோம், "அந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது," என்று சொன்னோம், அது டைட் டானிக் (Titanic) என்று அழைக்கப்பட்டது. நாம் எதையோ செய்துவிட்டதாக நினைத்தோம், கடல் வாழ்வில் நாம் எதையோ சாதித்துவிட்டோம், யாரும் அதன்மேல் கை வைக்க முடியாது, நாம் எதையோ செய்துவிட்டோம் என்று நினைத்தோம். ஆனால் கடலைக் கடக்கும் அதன் பயணத்தில், தேவன் தனது வல்லமையுள்ள கரத்தினால், மனிதன் செய்ய முயற்சிப்பது மூழ்கும் மற்றும் தோல் வியடையும் என்பதைக் காட்டினார், அவர் அதை மூழ்கடித்தார். 91 பிரெஞ்சுக்காரர்கள், மஜினோ கோட் டில் (Maginot line), முதல் உலகப் போருக்குப் பிறகு இனி போர்கள் இருக்காது என்று நினைத்தார்கள். கனடா, மற்றும் அமெரிக்கா போன்றவை சென்று ஜெர்மானியர்களைத் விரட்டிய பிறகு, அவர்கள் சிக்ஃபிரைட் கோட்டை (Siegfried line) உருவாக்கினார்கள், அவர்கள் செய்த போது, அது மஜினோ கோடு என்று அழைக்கப்பட்டதாக நினைக்கிறேன். அவர்கள் துப்பாக்கிகளை வெளியே வைத்து, ரைன் நதிக்கு மேலே, ஜெர்மனியை நோக்கித் திருப்பி, "ஜெர்மனி மீண்டும் நம் மீது படையெடுத்தால், நாங்கள் பலப்படுத்தப் பட்டிருக்கிறோம்," என்று சொன்னார்கள். ஆனால் அடால்ஃப் ஹிட்லர் அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து, அதைக் கைப்பற்றினான். 92 அவர்கள் என்ன செய்தார்கள்? பாவம், பெண்கள், மது மற்றும் களியாட்டங்களில் வாழ முயன்றார்கள். தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார், மோசம் போகா திருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார், மனுஷனானாலும் சரி, தேசமானாலும் சரி, எதை விதைக்கி றார்களோ, அதையே அறுப்பார்கள், தனிநபர் களுக்கோ அல்லது தேசங்களுக்கோ இது பொருந்தும். 93 நாம் அதை மனதில் கொள்ள வேண்டும். கிராண்ட் பிரெய்ரியில் ஒன்று கூடுவதற்காக ஒரு விசேஷித்த சந்தர்ப்பத்தில் தேவன் நம்மை இப்போது சந்திக்கிறார் என்று நாம் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்போது, அதை மனதில் கொள்ளுங்கள். தேவன் எதையும் சும்மா கதைக்காகச் செய்வதில்லை, இந்தக் காரியங்களைச் செய்வதில் அவருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, அவர் செய்ய முயற்சிக்கும் ஏதோ ஒன்று அவர் மனதில் இருக்கிறது. அவர் என்ன செய்கிறார் என்பதை நம்மால் மட்டுமே கண்டறிய முடியும், அவருடைய சித்தத்தைக் கண்டறிய முடியும், நம் பிதா என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதைக் கண்டறியச் சிறிது நேரம் ஒதுக்கி ஜெபிப்பது நமக்கு நல்லது. 94 இப்போது, சிக்ஃபிரைட் கோடு, அல்லது மஜினோ கோட்டிற்குப் பிறகு உடனடியாக, ஜெர்மானியர்கள் தங்களுக்கு மற்றொரு கோட்டை கட்டியதை நாம் காண்கிறோம். அது சிக்ஃபிரைட் என்று அழைக்கப்பட்டதாக நான் நம்புகிறேன், அவற்றில் ஒன்று, அது மாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள், "நாங்கள்-நாங்கள்-நாங்கள் இங்கே எங்களைப் பலப் படுத்திக்கொண்டு எங்கள்-எங்கள்-எங்கள் பொருட்கள் அனைத்தையும் கீழே வைப் போம்," என்று சொன்னார்கள். 95 மேலும்-மேலும் அருமையான ஜெர்மானிய மக்கள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரை ஏற்றுக்கொண்டார்கள், அந்த மனிதர் மீது விசுவாசத்தை வைத்தார்கள். நான் சமீபத்தில்தான் ஜெர்மனியை விட்டு வந்தேன், ஜெர்மனிக்குத் தேவைப்படுவதெல்லாம் தலைமைத்துவமே. நான் சொன்னேன், "ஒரு சர்வாதிகாரியின் மீது உங்கள் நம்பிக்கையை வைத்ததன் மூலம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பாருங்கள். அப்பா எங்கேயோ மண்டலத்தின் ஒரு பக்கத்தில் இருக்கிறார், அம்மா இங்கே கீழே இருக்கிறார், சகோதரி வேறெங்கேயோ வேலை செய்கிறாள், சகோதரன் கொல்லப் பட்டான், நீங்கள் எங்கே வந்துவிட்டீர்கள் என்று பாருங்கள். நீங்கள் நல்ல மனிதர்கள், ஆனால் தவறான நபரின் மீது உங்கள் நம்பிக்கையை வைத்துவிட்டீர்கள். அந்த விசுவாசத்தை எடுத்து இயேசு கிறிஸ்துவின் மீது வையுங்கள், நீங்கள் எங்கே வருகிறீர்கள் என்று பாருங்கள்." நல்ல மனிதர்கள், ஆனால் தங்கள் விசுவாசத்தைத் தவறான இடத்தில் வைத்துவிட்டார்கள். 96 நாம் அந்தக் குற்றத்திற்கு ஆளாகாமல் இருப்போமாக. நம் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மீது வைப்போம். எடி பெரோனெட் (Eddie Perronet) தனது வேளையில் முழங்கியது போல: இயேசுவின் நாம வல்லமையை வாழ்த்துங்கள்! தூதர்கள் முகங்குப்புற விழட்டும்; ராஜ கிரீடத்தைக் கொண்டு வாருங்கள், அவரையே எல்லாவற்றிற்கும் கர்த்தராக முடிசூட்டுங்கள். அங்கே நாம் இருக்கிறோம். உறுதியான கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நிற்கிறேன்; மற்றெல்லாத் தளங்களும் புதை மணலே. தேசங்கள் உடைகின்றன, இஸ்ரவேல் விழிக்கிறது, [ஒலி நாடாவில் காலி இடம்] தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அடை யாளங்கள்; புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்பட்டு, மிகக் கடும் ஆபத்துகளால் நிறைந்துள்ளன; "சிதறடிக்கப்பட்டவர்களே, உங்கள் சொந்த இடத்திற்குத் திரும்புங்கள்." 97 நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நம் பிதாவின் சித்தத்தைக் கண்டறிவோம், நம் பிதாவின் காரியங்களில் ஈடுபடுவோம், நமக்கென்று ஒரு பெயரை உண்டாக்க முயற்சிக்காமல் இருப்போம். 98 சுவிசேஷகர்கள் மத்தியில், பெரிய சுவிசேஷகர்களிடம் இதை நாம் காண்கிறோம், சில நேரங்களில் அவர்கள் சிறிய சபைகளுக்கும் மற்ற இடங்களுக்கும் வருவதற்குத் தாங்கள் மிகவும் பெரியவர்கள் என்று உணருகிறார்கள். ஒரு பெரிய பெயர்! கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரே ஒரு பெரிய நாமம் மட்டுமே உள்ளது, அது இயேசு கிறிஸ்துவின் நாமம், ஒரு நாள் முழங்கால் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கை செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமம். நம்மிடையே உள்ள பெரிய நாமம் அதுவே: இயேசு கிறிஸ்து. 99 ஆனால் நாம் அதைக் காண்கிறோம், நமது டைட்டானிக் மூழ்கியது, ஹிட்லரின் மஜினோ கோடு, அல்லது சிக்ஃபிரைட் கோடு, அது எதுவாக இருந்தாலும், அது தூள் தூளாக நொறுக்கப்பட்டது. அப்படியானால் நாம் எங்கே இருக்கிறோம்? பாதையின் முடிவில். நம் சாதனைகள் நல்லதல்ல, பிறகு ஏன் அவற்றோடு விளையாட வேண்டும்? தேவனிடம் ஒரு வழியும் சாதனையும் இருக்கிறதா என்று பார்ப்போம். 100 தேவன் ஒரு முறை உலகத்தை அதன் பாவம் மற்றும் அக்கிரமத்திற்காக அழிக்கப் போகும்போது, நோவா தேவனுக் காக ஒரு பேழையைக் கட்டினான். 101 நாம் எதையும் சாதிக்க முயல விரும்பவில்லை, ஏனென்றால் இந்த வழியில் நாம் சாதிக்க ஒன்றுமில்லை, ஏற்கனவே சாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். 102 உலகத்தை இரட்சித்திருக்கக்கூடிய ஒரு பேழையைக் கட்டும்படி தேவன் நோவாவிற்குக் கட்டளையிட்டார், அவர்கள் அதை விசுவாசித்திருந்தால் பிழைத்திருப் பார்கள். ஆனால் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று தேவனுக்குத் தெரியும், எனவே அவர் அதை இத்தனை முழம் நீளம் என்று அளவாகச் செய்தார். 103 நோவாவின் நாட்களில் நடந்தபடியே, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் என்று அவர் வாக்குப்பண்ணினார். அவரிடம் ஒரு சுவிசேஷம் இருக்கிறது, அது பாவமும் அவிசுவாசமும் நிறைந்த ஆண்களையும் பெண்களையும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் வரவிடுவதில்லை, அது இடுக்கமானது, ஆனால் அதுவே வழி. யார் உள்ளே வருவார்கள் என்று அவருக்குத் தெரியும், ஆனால் இதுவே தேவன் ஏற்படுத்திய வழி. 104 அந்த வாசலில் நின்று நியாயத்தீர்ப்பைப் பிரசங்கித்த நோவாவைக் கேட்ட அனைவரும்... சில நேரங்களில் அது தீவிரமாகத் தோன்றும், அவிசுவாச இருதயத்திற்கு அது எப்போதும் அப்படித் தான் இருக்கும், ஆனால் அவிசுவாசம் தேவனைத் தடுத்து நிறுத்தாது, அவிசுவாசம் அவிசுவாசியை மட்டுமே தடுத்து நிறுத்தும். அது நிறுத்தாது... அவிசுவாசத்தினால் சூரியன் பிரகாசிப்பதை உங்களால் நிறுத்த முடியாது, உங்கள் அவிசுவாசத்தினால் தேவனுடைய திட்டத்தையும் உங்களால் நிறுத்த முடியாது. 105 யோவான் ஸ்நானகன் சொன்னான், "இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க தேவனால் கூடும்." பாருங்கள்? தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டது, அது நிறைவேறியாக வேண்டும். பாருங்கள்? யாரோ ஒருவர் அதைக் கேட்கப் போகிறார்கள், யாரோ ஒருவர் அதன் பலனைப் பெறப் போகிறார்கள். நாம் அனைவரும் சுயாதீனமானவர்கள், நம் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளலாம். 106 ஆனால் பாருங்கள், நோவாவின் நாட்களில் என்ன நடந்தது? அதைக் கேட்ட அனைவரும் பயித்தியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், மலையின் மேல் இந்தப் பேழையைக் கட்டிக்கொண்டிருந்த அவனைப் பரியாசம்பண்ணினார்கள், மழை எப்போதுமே பெய்ததில்லை, அறிவியல் அவரிடம் வந்து, "தண்ணீர் எங்கே இருக்கிறது? அது எங்கே இருக்கிறது என்று காட்டு," என்று சொல்லியிருக்கலாம். 107 ஆனால் தேவனுடைய திட்டம் ஒருபோதும் பொருள் சார்ந்த காரியங்களின் மேல் இருந்ததில்லை, அது அவருடைய வார்த்தையின் மீதான விசுவாசமே. அதுவே தேவன் ஏற்படுத்திய வழி, அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வது, அதை விசுவாசிப்பது, அறிவியல் ரீதியாக உங்களால் நிரூபிக்க முடியாத ஒன்று. 108 நோவா சொன்னான், "தண்ணீர் எங்கே இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அது வரும் என்று தேவன் என்னிடம் சொன்னார், அதுவே எனக்குப் போதும்." எனவே அவன் பேழையைக் கட்டினான், அதற்காக ஆயத்தம்பண்ணினான். 109 இஸ்ரவேல் எகிப்தில் அடிமைத் தனத்தில் இருந்தபோது, அங்கே மோசே என்றொருவர் இருந்தார், ஒரு நாள், அவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார், ஓடிப்போன தீர்க்கதரிசி, வனாந்தரத்தின் பின்பகுதியில், முட்செடி எரிவதைக் கண்டார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அறிவுஜீவித்தனத்தோடும் மேலே செல்கிறார், அவரால் எகிப்தியர்களுக்கு ஞானத்தைப் போதிக்க முடியும். தான் தோல்வியுற்ற இடத்திற்கே மீண்டும் செல்லும்படி தேவன் அவரை அழைத்தார், தன் சொந்த முயற்சியில் சாதிக்க முயன்று, ஒரு எகிப்தியனைக் கொன்று, "நிச்சயமாக, நான்தான் அந்த ஆள்," என்று நினைத்தார். ஆனால் பாருங்கள், நாம் எதையாவது நம் சொந்த வழியில் செய்ய முயற்சிக்கும்போது, நாம் தேவனுடைய திட்டத்திற்கு வெளியே இருக்கிறோம். 110 நாம் அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு அதனுடன் உறுதியாக நிற்க வேண்டும், நம்மால் அதைப் பார்க்க முடிந்தாலும் முடியாவிட்டாலும், அது சரியாகத் தோன்றினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய வார்த்தையுடன் நிற்க வேண்டும். அது ஏற்கனவே சாதிக்கப்பட்ட ஒன்று, ஏனென்றால் தேவன் எல்லையற்றவர், அவர் தோல்வியடைய முடியாது. அது எவ்வளவு வேடிக்கையாகத் தோன்றினாலும், எவ்வளவு நம்பமுடியா ததாகத் தோன்றினாலும், அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்-அவர் எங்கும் நிறைந்தவர், சர்வஞானி, எல்லையற்றவர், மற்றும் அவர்... ஒவ்வொரு வார்த்தையும் பூரணமானது. 111 அவரால் தன் திட்டத்தை மாற்ற முடியாது, நான் என்னுடையதை மாற்றலாம், நீங்கள் உங்களுடையதை மாற்றலாம். நான் ஒன்றைச் சொல்லிவிட்டு, அதைத் திரும்பப் பெறலாம், நான் ஒரு மனிதன், நீங்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். ஆனால் தேவன் எல்லையற்றவராக இருப்பதால், அவரால் அதைப் பற்றி இன்னொரு முடிவை எடுக்க முடியாது, அவர் தனது முதல் முடிவிலேயே உறுதியாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு முடிவும் பூரணமானது. 112 பாருங்கள், நாம் எல்லைக் குட்பட்டவர்கள், "சரி, நான்-நான்-நான் தவறு செய்துவிட்டேன்," என்று சொல் லலாம். ஆனால் தேவன் தேவனாக இருந்து தவறு செய்ய முடியாது. எனவே அவர் என்ன நடவடிக்கை எடுத்தாரோ... ஒரு மனிதனை இரட்சிக்க அவர் ஒருமுறை அழைக்கப் பட்டபோது, ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் அவர் அந்த மனிதனை இரட்சித்திருந்தால், எந்த மனிதனும், எந்த நேரத்திலும், எங்கும், அதே அடிப்படையில் சந்தித்தால், தேவன் அதை மீண்டும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார். 113 அவர் ஒரு மனிதனை அவனுடைய விசுவாசத்தினால் சுகப்படுத்தியிருந்தால், ஒவ் வொரு முறையும் அவர் அதே நிபந்த னையைச் சந்திக்க வேண்டும், இல்லை யென்றால் அவர் முதல் மனிதனை இரட்சித்தபோது அல்லது சுகப்படுத்தியபோது தவறு செய்தார் என்றாகும். பாருங்கள்? அதைத்தான் அவர் நமக்காகச் சாதித்தார்: விசுவாசம்! அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசம்! 114 இப்போது நான்-நான் இதைச் சொல்லி முடிக்கலாம், மோசேயால் மரத்திலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டு ஆய்வகத்திற்குச் சென்று அவை ஏன் எரிந்துபோகவில்லை என்று சோதித்துப் பார்த்திருக்க முடியாது, அப்படி இருந்தி ருந்தால், மரத்தில் என்ன தெளிக்கப் பட்டிருக்கிறது என்று அவர் யோசித் திருப்பார், அவரே ஒரு விஞ்ஞானிதான். 115 எகிப்திய விஞ்ஞானிகள் இப்போது நம்மைவிட வெகு தொலைவில் இருந் தார்கள், நாம்... அவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள், இந்த நேரம் வரை. அவர்களால் ஸ்பிங்க்ஸ் (sphinx) மற்றும் பிரமிடுகள் மற்றும் போன்றவற்றை உருவாக்க முடிந்தது. நம்மால் இப்போது உருவாக்க முடியாது, ஆனால், அவர்களிடம் ஒரு சாயம் இருந்தது, அவர்கள் மம்மிகளின் ஆடைகளில் போட முடியும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுக ளுக்குப் பிறகும் அதன் நிறம் மாறாமல் இருக்கிறது, நம்மிடம் அத்தகைய எதுவும் இல்லை, பாருங்கள். இப்போது, ஆனால் அவர்கள் அறிவியலில் முன்னேறி யிருந்தார்கள். 116 ஆனால் மோசே ஒருபோதும் அறிவியல் தேடலின் மூலம் காரணத்தைக் கண்டறிய முயலவில்லை, அவர் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டார். 117 அதனால்தான் நாம் கிராண்ட் பிரெய்ரியில் இருக்கிறோம். அதனால்தான் இந்தச் சபை இன்று காலை இங்கே நிற்கிறது. குருடரின் கண்களைத் திறக்க முடியும், அல்லது செவிடன் காதுகளைத் திறக்க முடியும் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முயற்சிப்பது நம் மதம் அல்ல. அது தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வது. தேவன் சொன்ன அதே காரியத்தைச் சொல்வது, நமக்காகச் சாதிக்கப்பட்ட ஒன்று, அதை நாம் விசுவாசிக்கிறோம். நாம் அதைக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை, தேவன் அதைக் கண்டுபிடித்துவிட்டார். 118 ஒரு கறுப்பு மாடு பச்சைப் புல்லைத் தின்று, எப்படிக் வெள்ளைப்பாலைக் கொடுக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் அது அதைச் செய்கிறது. பாருங்கள், என்னால் அந்தக் காரியங்களைக் கணக்கிட முடியாது, எனக்குத் தெரியாது, ஆனால் நான் பாலை அனுபவிக்கிறேன். 119 பாவங்களில் மிகவும் மூழ்கிப்போன ஒரு பாவி, தெருவில் நிற்கும் ஒரு விபச்சாரியை நாய்கள் கூடத் ஏறெடுத்துப் பார்க்காத அளவுக்கு அவ்வளவு அவமா னத்தில் இருப்பவளை, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படி ஒரு சீமாட்டியாக மாற்ற முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, நான் அதை ஏற்றுக் கொள்கிறேன், அவர் அதைச் செய்கிறார். நானே ஒரு குருடன், ஏன் எனக்கு! அத்தனை வருடங்களாக முடமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர் அப்ஷா (Upshaw) எப்படிச் சுகமானார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! 120 இங்கிலாந்தின் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், மறைந்த ஃப்ளாரன்ஸ் நைட் டிங்கேல், அதாவது, மறைந்த ஃப்ளார்..., அவருடைய கொள்ளுப் பேத்தி, புற்றுநோய் அவரைத் தின்றுகொண்டிருந்தது! ஒருவேளை நீங்கள், புகைப்படங்களுடன் கூடிய என் புத்தகத்தை வைத்திருப்பீர்கள், அவர் அறுபது பவுண்டு எடை கூட இல்லை. ஆனால் அவர் ஆரோக்கியமான, வலிமையான பெண்ணாக இருக்கிறார். என்னால் அதை விளக்க முடியாது, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக் காவின் உயர் மருத்துவ நிபுணர்கள் அவர் இறந்துவிடுவார் என்று கைவிட்டபோது, அவர் இன்று உயிரோடிருக்கிறார். என்னால் அதை விளக்க முடியாது, சகோதரர்களே, நான் அதை விளக்க முயற்சிப்பதில்லை, நான் அதை வெறுமனே விசுவாசிக்கிறேன். 121 என் சொந்தச் சாதனைக்காக என்னால் எதையும் உருவாக்க முடியாது. தெய்வீக சுகத்தைப் பற்றி நான் இங்கே வந்து உங்களுக்குச் சொல்லவும் விளக்கவும் முடியாது; வேறு யாராலும் முடியாது. ஆனால் நமக்காகச் சாதிக்கப்பட்ட ஒன்றின் மேல் விசுவாசம் வைக்க, என் விசுவாசத்தை உங்கள் விசுவாசத்துடன் இணைக்க நான் இங்கே வந்திருக்கிறேன், அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, நமக்காகக் கல்வாரியில் அதைச் சாதித்தவர். 122 நோவாவிடம் ஒரு பேழை இருந்தது. மோசே சாதிப்பதற்கு அவர் கையில் ஒரு கோல் இருந்தது. அது தேவனுடைய வார்த்தை. மற்ற பொருட்கள் மிதக்காதபோது அந்தப் பேழை எப்படி மிதந்தது? என்னால் சொல்ல முடியாது. தேவன் அப்படிச் சொன்னார். மோசே கையில் ஒரு கோல் இருந்தது. அந்தக் கோல் மற்ற கோல்களை விட என்ன பெரியது? ஆனால் அது என்ன செய்தது? அது அவிசுவாசிகளின் வாயை அடைத்தது, அது செங்கடலைப் பிளந்தது, தாகத்தின் நேரத்தில் தண்ணீரையும், பசியின் நேரத்தில் உணவையும் கொண்டுவந்தது. அது என்ன? தேவன் அந்தக் கோலின் மூலம் சாதித்தார். 123 சாஸ்திரிகள், அவர்களிடம் ஒரு நட்சத்திரம் இருந்தது, அந்த நட்சத்திரத்தின் மூலம், அவர்கள் தேவனுடைய சாதனை யைப் பின்தொடர்ந்தார்கள். பேழை அந்நாளில் தேவனுடைய சாதனையாக இருந்தது. கோல் மோசேயின் நாட்களில் சாதனையாக இருந்தது. நட்சத்திரம் சாஸ்திரிகளின் நாளில் சாதனையாக இருந்தது. 124 சகோதர சகோதரிகளே, கனடிய நண்பர்களே, கிறிஸ்துவே இன்று நமக்கான தேவனுடைய சாதனை, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம், அவர் நம் முன் தன்னை நிறுத்துகிறார், அவர் மரிக்கவில்லை, அவர் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறார். அவர் உயிருள்ளவர் என்பதைக் காண்பிக்க, இன்று மதியம் நம் நடுவில், இப்போது நம் நடுவில் இருக்கிறார். 125 நான் எதைச் சாதிக்க முடியும், எதை நிரூபிக்க முடியும் என்பது அல்ல, எனக்காகத் தேவன் சாதித்ததை நான் எதை விசுவா சிக்கிறேன் என்பதே முக்கியம். என்னிடம் இளங்கலை பட்டமோ, பிஎச்.டி.யோ அல்லது எல்.எல்.டி.யோ இல்லை, நான் ஒரு தொடக்கப்பள்ளி கல்வி கூட இல்லாதவன். என்னால் எதையும் சாதிக்க முடிய வில்லை, ஆனால் கல்வாரியில் அவர் எனக்காகச் சாதித்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன், கிறிஸ்து நமக்காகத் தன் ஜீவனைக் கொடுத்தார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை நிரூபிக்கத் தேவன் அவரை உயிர்த்தெழுந்த நாளில் எழுப்பினார். நான் தேவனுடைய சாதனையை ஏற்றுக்கொள்கிறேன். 126 பாவத்தினால் நோயுற்ற, அல்லது சரீரத்தில் நோயுற்ற ஒவ்வொருவருக்கும் இன்று தேவன் ஏற்படுத்திய வழி இதுவே, தேவனுடைய சாதனையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஜெபத்திற்காகச் சற்று நேரம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 127 பரிசுத்தமும் தெய்வீகமுமுள்ள தேவனே, நாங்கள் உம்முடைய சமுகத்தில் வருகிறோம், இரக்கத்தைக் கேட்கிறோம் ஆண்டவரே. நாங்கள் நீதியை வாஞ்சிக்கவும் இல்லை, அதற்காக ஏங்கவும் இல்லை. தேவனுடைய நீதியின் முன் எங்களால் நிற்க முடியாது, தேவனுடைய நீதி எங்களைக் குற்றவாளிகளாக்கி, எங்களைப் பாவிகளாக்கி, எங்களைத் திருப்பி அனுப்பிவிடும். 128 நாங்கள் உம்முடைய நியாயப் பிரமாணத்தை விரும்பவில்லை பிதாவே, ஏனென்றால் உம்முடைய நியாயப்பிரமாணம் எங்கள் எல்லாரையும் பாவியாக்குகிறது. ஆனால் நாங்கள் உம்முடைய கிருபையை விரும்புகிறோம், உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக உம்முடைய மன்னிக்கும் கிருபையை விரும்புகிறோம், விசுவாசிக்கிற யாவரும் ஏற்றுக் கொள்ளப் படுகிறார்கள். 129 பிதாவே, எந்தவொரு குறிப்பிட்ட சாதனையும் செய்ய, எங்களை ஒரு ஸ்தாபனமாகவோ அல்லது ஒரு பிரிவாகவோ மாற்ற நாங்கள் எதையும் கணக்கிட முயற்சிக் கவில்லை. எங்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள நாங்கள் முயற்சிக்கவில்லை, ஆனால் நாங்கள் தாழ்மையுடன் இருக்கி றோம், நீர் நமக்காகச் செய்த சாதனைக்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம், ஏனென்றால் தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்; ஆனால் தன் சொந்தச் சாதனையின் மூலம் தன்னை உயர்த்துகிறவன், நிச்சயமாகத் தாழ்த்தப்படுவான். 130 இந்தச் சிறிய சபையை ஆசீர்வதியும் ஆண்டவரே, அதன் அருமையான போதகர், இன்று நம்முடன் இருக்கும் இந்த அருமையான சகோதரர்கள், உதவிக்காரர்கள், பொறுப்பாளர்கள், இந்த அன்பான பெண்கள், இளம் பெண்கள் மற்றும் இங்கே அமர்ந்திருக்கும் வாலிபர்கள், வாழ்க்கையின் திருப்புமுனையில் இருப்பவர்கள். 131 தேவனே, உம்முடைய இரக்கங்களை எங்களுக்குத் தாரும், இயேசுவின் மூலம் உம்முடைய சாதனையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் மரித்தார், ஆம், அதற்கும் மேலாக, அவர் நம்மை நீதிமானாக் குவதற்காக மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்தார் என்று நாங்கள் விசுவா சிக்கிறோம். அவர் உன்னதத்திற்கு ஏறிச் சென்றார், அங்கே நமக்காகப் பரிந்து பேசுபவராகவும், நம்மை வழிநடத்தவும் பரிசுத்த ஆவியானவரைத் திரும்ப அனுப்பினார் என்றும், கிறிஸ்து ஆவி வடிவில் நம்மில் வாசம் பண்ணுகிறார் என்றும், இயேசு செய்த அதே கிரியைகளைச் செய்வார் என்றும் நாங்கள் விசுவாசிக் கிறோம், ஏனென்றால் நம்மில் இருப்பது அவருடைய ஜீவனே. 132 ஓ ஆண்டவரே, எங்கள் ஆலயங்கள் சுத்திகரிக்கப்படட்டும், எங்கள் இருதயங்கள் எல்லா அவிசுவாசத்திலிருந்தும் சுத்திகரிக்கப் படட்டும், எங்கள் ஆத்துமாக்கள் கிறிஸ்து வினால், உம்முடைய சாதனையினால் திருப்தியடையட்டும். அவருடைய இரக்கத் தையும் அவருடைய வார்த்தையையும் எடுத்துக் கொண்டு, இன்று மதியம் இந்த மக்களுக்கு அவரை மிகவும் உண்மையாகக் கொண்டுவர எங்களுக்குக் கிருபை தாரும், ஒரு கிராண்ட் பிரெய்ரி இருக்கும் வரை, இங்கே விசுவாசிக்கிற மக்கள் இருக்கும் வரை, இந்தக் கதை சொல்லப்படட்டும், ஏனென் றால் அவர் இங்கே இருக்கிறார். 133 இங்கே ஒரு பழைய பாணியிலான எழுப்புதல் வெடிக்க இது காரணமாக இருக்கட்டும், பல ஆத்துமாக்கள் இரட்சிக்கப் படட்டும், ஏனென்றால், ஒருவேளை இது ஒரு பெரிய சந்திப்பின் நாளாக இருக்கலாம், நாம் அனைவரும் உம்முடைய விசுவாசப் பிள்ளைகளாகக் கூடிவந்திருக்கிறோம். இயேசுவின் நாமத்தில், அவருக்காகவே இதைக் கேட்கிறோம். ஆமென். ~ 2 ~